தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கபட்டுள்ள விஜயகாந்த் உடலை பார்த்து அவர் கலங்கி நின்றார்.
நடிகர் விஜயகாந்த் உடன் சில படங்களில் விஜய் நடித்துள்ளார். அதில் ‘செந்தூரப்பாண்டி’ படத்தை குறிப்பிட்டு சொல்லலாம். அதன் பிறகு அவரது திரை வாழ்க்கை சக்சஸ் பெற்றது. இதனை அவரே வீடியோ பேட்டி ஒன்றில் சொல்லியுள்ளார். அதேபோல விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய முக்கிய திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் விஜய், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
விஜயகாந்த் உடலை பார்த்து கலங்கியபடி நின்று சில நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி இருந்தார்.
+ There are no comments
Add yours