நடிகர் சங்கத்தை மீட்டெடுத்த விஜயகாந்த்!

Spread the love

கருப்பு வெள்ளை காலத்தில் அப்போது பிரபலாமாக இருந்த தயாரிப்பாளர் கே.சுப்பிரமணியம் உருவாக்கிய ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையே தென்னிந்திய நடிகர்கள் சங்கம் உருவாக மூலகாரணம் ஆனது.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக சிவாஜியை தொடர்ந்து ராதாரவி தலைவராக இருந்த 1988 ஆம் ஆண்டில் 55 லட்ச ரூபாய் கடனை அடைக்கவில்லை என்றால் நடிகர் சங்க நிலத்தை ஜப்தி செய்ய போவதாக பாரத ஸ்டேட் வங்கி நடிகர் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது

கட்டடம் கட்டவே கடன் வாங்கியதாலும் நிலம் வாங்க கடன் வாங்கவில்லையாதலாலும் வங்கியின் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அந்த தருணம் நடிகர் சங்கத்தின் கடன் 1 கோடியே 55 லட்சமாக உயர்ந்து நடிகர் சங்கத்தை திக்கு முக்காட செய்தது. இந்த கடனை தள்ளுபடி செய்ய அப்போதைய பிரதமர் நரசிம்மராவிடம் முறையிட்டது தென்னிந்திய நடிகர் சங்கம். இருந்தும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

இப்படி தென்னிந்திய நடிகர் சங்கம் கடனில் தத்தளித்த காலகட்டதில்தான் 2000 ஆம் ஆண்டில் நடிகர் சங்க தலைவராக விஜயகாந்தும் பொது செயலாலராக சரத்குமாரும் பதவியேற்றனர். விஜயகாந்த் மற்றும் சரத்குமாரின் அடுத்தடுத்த தீவிர முயற்சியால் கடன் தொகையை 1 கோடியே 25 லட்சமாக குறைத்தது வங்கி. அதிலும் உடனடியாக வங்கிக்கு 55 லட்ச ரூபாயை கட்ட வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தது. உடனடியாக சங்கத்தின் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு முன்னணி நடிகர்களிடமும் ஏனைய நடிகர்களிடமும் சேர்த்து மொத்தம் 55 லட்சம் வசூலிக்கப்பட்டு உடனடியாக வங்கிக்கு செலுத்தியது தென்னிந்திய நடிகர் சங்கம்.

நடிகர் சங்கம் தலைவர் விஜயகாந்த்

வங்கிக்கு மீதம் கொடுக்க வேண்டிய தொகைக்கு தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டார் விஜயகாந்த். அதன்படி சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் இரண்டு நாட்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தியது நடிகர் சங்கம். இந்த கலை நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையை அப்போது ஏற்று இருந்தது ஒரு தொலைக்காட்சி நிறுவனம். கலை நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமைக்காக அந்த தொலைக்காட்சி நிறுவனத்திடமிருந்து 2 கோடியே 50 லட்சம் தொகையை பெற்றது தென்னிந்திய நடிகர் சங்கம்.

இப்படி முதல் முறையாக தென்னிந்திய நடிகர் சங்கம் விஜயகாந்த் தலைவராக இருந்த சமயத்தில் தன் கணக்கில் வரவு வைத்தது. ஆக இறுதியில் வங்கி கடன் முழுமையாக அடைக்கப்பட்டு வங்கியிடமிருந்து நடிகர் சங்கத்தின் தாய்பத்திரம் மீட்க்கப்பட்டது. அதை மீட்ட சுந்தர பாண்டியன் ஆனார் விஜயகாந்த்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours