குற்றவியல் சட்டங்களில் மாற்றம் பற்றி முதல்வர் ஸ்டாலின் அமித்ஷாவுக்கு கடிதம் !

Spread the love

புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டன. இதன்படியே குற்றச் செயல்களில் ஈடுபவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டங்கள், இந்த காலத்திற்கு ஏற்ப இல்லை என்று புகார் எழுந்ததால், அவற்றுக்கு மாற்றாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷ்ய அதிநியம், பாரதிய நியாய சன்ஹிதா என்ற மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

இந்த சட்ட மசோதாக்கள் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. மூன்று குற்றவியல் சட்டங்களும் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “மூன்று குற்றவியல் சட்டங்களுக்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் அதில், ‘மத்திய அரசின் மூன்று சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க தங்களுக்கு (மாநிலங்களுக்கு) அவகாசம் தரப்படவில்லை. இந்த மூன்று சட்டங்களுக்கும் எந்த ஆலோசனையும் இல்லாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு சில சிக்கல்கள் உள்ளது.

எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு இல்லாமலேயே புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என சட்டங்களின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன. சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம்.

சட்டங்களில் சில அடிப்படை பிழைகள், முரண்பாடுகள் உள்ளது. எனவே புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்’ என தமிழக முதல்வர் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours