கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறை- போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Spread the love

தமிழகத்தில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அனைவரும் விடுமுறை நாட்களை கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர். இதனை சிறப்பிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறை நாட்களை கொண்டாடும் வகையில் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பொதுவாக வார இறுதி நாட்களில் சென்னை, கோவை உட்பட பெருநகரங்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ”இன்று டிசம்பர் 22ம் தேதி ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்துமஸ் மற்றும் வார விடுமுறை, அரையாண்டு விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 280 பேருந்துகளும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு இடங்களுக்கு 81 பேருந்துகளும் மாதவரத்திலிருந்து 20 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போல் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊர் செல்பவர்கள் பயணத்தை திட்டமிடவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும்வகையில் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours