வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையேற்றத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.203 கூடுதலாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விலையேற்றம், உணவகங்கள் – தேநீர் கடைகள் வைத்திருப்போர் என சிறு வணிகர்களை பெரிதும் பாதிப்படையச் செய்யும்.
ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையாலும் – முறைபடுத்தப்படாத GST – பணமதிப்பு நீக்கம் – கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகளாலும் நொடிந்திருந்த சிறு வணிகர்கள் மீது மேலும் ஒரு தாக்குதலாக இந்த விலையேற்றம் அமைந்துள்ளது.
இந்த விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours