சரக்கு திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் நிகழ்ச்சியின் தொகுப்பாளினிக்கு மாலை அணிவித்த சம்பவத்திற்கு நடிகர் கூல்சுரேஷ் மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது விஜய் நடித்துள்ள லியோ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் மன்சூர் அலிகான், இதற்கிடையில் ‘சரக்கு’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
ஜெயக்குமார் ஜே என்பவர் இயக்கியுள்ள இந்த படத்த்தில் ஹீரோயினாக வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். இந்த விழாவில் நடிகர் கூல் சுரேஷூம் கலந்து கொண்டார்.
மேடையில் பேசுவதற்கு படக்குழுவினரை தொகுப்பாளினி வரவேற்றார். அப்போது, கூல் சுரேஷை தொகுப்பாளினி பேச அழைத்தார். கழுத்தில் மாலை அணிந்து கொண்டு கையில் ஒரு மாலையுடன் வந்த கூல் சுரேஷ், சற்றும் எதிர்பாராதவிதமாக தொகுப்பாளினிக்கு மாலை அணிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதனால் கடும் கோபமடைந்த தொகுப்பாளினி, மாலையை கழற்றி கீழே போட்டார். இந்த சம்பவம் பத்திரிக்கையாளர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை அடுத்து நன்றி தெரிவிப்பதற்காக மேடைக்கு வந்த மன்சூர் அலிகானிடம் பெண் பத்திரிக்கையாளரிடம் கூல் சுரேஷ் நடந்து கொண்டது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான், ‘கூல் சுரேஷ் அப்படி நடந்து கொண்டது தவறு, அவரின் செயலால் நானும் அதிர்ச்சியடைந்தேன் என கூறி கூல் சுரேஷை மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து தான் தெரியாமல் அப்படி செய்துவிட்டதாகவும், மன்னிச்சுக்கோ தங்கச்சி’ என கூறி மேடையில் மன்னிப்பு கேட்டார். இந்த வீடியோவை பார்த்த பலரும் கூல் சுரேஷின் இந்த செயல்பாடு குறித்து கண்டங்களை பதிவு செய்தனர்.
இந்த நிலையில், இசைவெளியீட்டு விழாவில் நடந்த சம்பவத்திற்கு நடிகர் கூல்சுரேஷ் மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “நேற்று சரக்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் சில அசம்பாவிதம் நடந்துவிட்டது. அந்த தொகுப்பாளினிக்கு மாலை போட்டேன். ஆனால் பெண்ணுக்கு மாலை போடக்கூடாது என்று எனக்கு தெரியாது. அவரின் பெயர் கூட தெரியாது.
+ There are no comments
Add yours