நேற்று முன்தினம் காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் நள்ளிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது.
இந்த புயலுக்கு இந்தியா பரிந்துரைத்தபடி, ‘தேஜ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 25ஆம் தேதி ஓமன் அருகே தேஜி புயல் கரையை கடக்கிறது.
மேலும், இந்த புயல் உருவாகினால் தமிழ்நாடு ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம், வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலு குறைந்து காணப்படும். இதனால், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours