சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை

Spread the love

சென்னை: தேவையற்ற நெரிசலை தவிர்க்க, தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை வழங்கியுள்ளார்.

அதன் விபரம்: “சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க தரிசன வரிசைக்கான டிஜிட்டல் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், மேலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், இதனால் சபரிமலையில் அதிக நெரிசலைத் தவிர்க்கலாம் என்றும் கேரள காவல்துறை அறிவித்துள்ளது.

சபரிமலையில் நேற்று வரை 11 லட்சத்து 12,447 பேர் தரிசனத்துக்கு சென்றுள்ளனர். கடந்த 15ம் தேதி முதல் 1 லட்சத்து 95,327 பேர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்னரோ அல்லது பின்னரோ வந்துள்ளனர். ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தை பின்பற்றாமல் கடந்த 15-ம் தேதி முதல் தரிசனத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை இது குறிக்கிறது. எனவே, குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தால், ஐயப்ப தரிசனம், சிரமம், நெரிசல் இன்றி, சுமுகமாக நடைபெறும் என கேரள மாநில காவல்துறை வலியுறுத்தியுள்ளது. இதை கடைபிடிக்க வேண்டும்.

செய்யக்கூடியவை – செய்யக்கூடாதவை: ”பதினெட்டாம்படியை அடைய வரிசை முறையை பின்பற்றவும், பம்பையிலிருந்து சன்னிதானத்திற்கு செல்லும்போது கூட்டத்தின் அளவை கண்டு அதற்கேற்ப செல்லவும், இலவச உதவி எண் 14432-ஐ பயன்படுத்தி எந்தவித உதவிக்கும் காவல்துறையை அணுகலாம். சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும், ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்தவும், குழந்தைகள் மற்றும் வயது முதிர் பெண்கள் ஒவ்வொருவரும் அடையாள அட்டைகள் அணிந்திருக்க வேண்டும் உட்பட 17 அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும்” என டிஜிபி வலியுறுத்தினார்.

மேலும், வரிசையில் முன் செல்ல தாவிக் குதிக்க வேண்டாம், ஆயுதங்கள் அல்லது வெடிப்பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் உள்பட்ட செய்யக்கூடாதவை என மேலும், 17 அறிவுரைகளை டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours