நிற்காமல் செல்லும் அட்லீயின் பரிமாணம் !

Spread the love

தமிழ் சினிமாவில் தனது தனித்துவ கதைகள் மூலம் மிகவும் பிரபலமான அட்லீ, இப்பொது பாலிவுட்டிலும் தனது முத்திரையை பதித்துவிட்டார். இயக்குனர் அட்லீ இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் அட்லீக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தனது திரை வாழ்க்கையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, அட்லீ இயக்கியுள்ள ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

இப்படி, தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் சிஷ்யனாக இருந்து கொண்டு, தனது குருவை மிஞ்சிவிட்டார் என்றே சொல்லலாம். அட ஆமாங்க… இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘2.0’ திரைப்படம் அப்போவே ரூ.540 கோடியில் எடுக்கப்பட்டது.

ஆனால், பாக்ஸ் ஆபிஸில் ‘2.0’ திரைப்படம் 800 கோடி ரூபாய் வசூலித்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இப்பொது, தனது குருவை முந்திவிட்டார் நம்ம அட்லீ, ஆம் அவரது தற்போதைய திரைப்படமான செப்டம்பர் ‘ஜவான்’ வெளியான 13 நாட்களில் உலகம் முழுவதும் 900 கோடி ரூபாய் வசூல் செய்து, ஷங்கரின் 2.0 திரைப்படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

அட்லீ இயக்கிய படங்களில் வசூல் விவரம்:

அட்லீக்கு தனது முதல் இயக்கமான அறிமுக படமே நல்ல வரவேற்பு கிடைத்து, வசூலை பெற்று தந்தது. அதன்படி, இந்த திரைப்படம் ரூ.13 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 25 நாட்களில் ரூ.80 கோடியை வசூலித்திருந்தது. இது அவருக்கான முதல் வெற்றியாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து, தளபதி விஜய்யை வைத்து ‘தெறி’ என்ற படத்தை இயக்கினார்.

விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் யாறலாம் என்றாலும், படத்தின் கதை நன்றாக இருந்ததால், ரூ.75 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இது 2016 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த இரண்டாவது தமிழ் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, மீண்டும் விஜய்யுடன் கைகோர்த்து ‘மெர்சல்’ என்ற படத்தை இயக்கினார்.

சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டில் வெளியாகி உலகளவில் 250 கோடி ரூபாய் வசூலித்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக மாறியது. தொடர் வெற்றி காரணமாக, மீண்டும் மூன்றாவது முறையாக விஜய்யுடன் கைகோர்த்து, சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவான பிகில் திரைப்படம் பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று ரூ.300 கோடி ரூபாய் வசூலித்து 2019 இன் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியது.

இப்படி தனது முதல் படத்தின் வெற்றியின் மூலம், தளபதி விஜய் உடன் மூன்று முறை கைகோர்த்து தனது வெற்றியை நிரூபித்து, பாலிவுட்டுக்கு சென்ற அட்லீக்கு ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.80 கோடியில் தொடங்கிய தனது வசூல் வேட்டையை 1000 கோடிக்கு இலக்கு வைத்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours