விக்ரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது.. அறிக்கை வெளியீடு !

Spread the love

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்கத் துணைத் தலைவர் சி.அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிட இருப்பதாக அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.

அதிமுக இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்ததால், மும்முனைப் போட்டி உறுதியாகியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக இந்த முடிவை எடுத்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours