திமுகவும் அதிமுகவும் ஒன்றாக இணைந்து விட்டார்கள்… அண்ணாமலை !

Spread the love

கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சூலூர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று (மார்ச் 27) நடைபெற்றது. இதில் பா.ஜ.கவின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அண்ணாமலை கூறுகையில், :மக்கள் தன்னெழுச்சியாக வர துவக்கி விட்டனர்.

களத்தின் நிலவரத்தை நீங்கள் பார்க்கின்றீர்கள். சாதாரண பொதுமக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் களத்திற்கு வந்திருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி கோயம்புத்தூரில் குறைந்தபட்சம் 60 சதவீதம் வாக்குகள் பெறும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கோவையின் வளர்ச்சி குறித்து பேசுவதற்கு தயாரா? என அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு, எஸ்.பி வேலுமணியை கொண்டு வந்து உட்கார வையுங்கள். 10 வருடமாக எதுவும் நடக்கவில்லை என்றால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான பணம், என்னென்ன பணம் கோவைக்கு வந்திருக்கிறது. கோவைக்கு 2021 தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது ஸ்டாலின் என்ன சொன்னார்? ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னாரே? மணி என்று யாருக்கெல்லாம் பெயர் இருக்கோ அவங்க மீது நடவடிக்கை எடுப்பேன் என்றார். இப்பொழுது இருவரும் அண்ட் கோ போட்டு இருக்கின்றனர்.

ஊழல் தடுப்புத் துறை இவர்கள் மீது போடப்பட்ட குற்றப்பத்திரிகை எங்கே போனது. திமுகவும் அதிமுகவும் ஒன்றாக இணைந்து விட்டார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய பின்பு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய ஏன் தாமதம்? எஸ்.பி வேலுமணியை பிரஸ்மீட்டில் உட்கார வையுங்கள். அது முடியவில்லை என்றால் 10 கேள்விகள் எழுதிக் கொடுக்கிறேன். அந்த கேள்விக்கு பதிலை வாங்கி வாருங்கள். காண்ட்ராக்டர் பெயர், வேலை எடுத்த எந்த காண்ட்ராக்டர் மனைவி கவுன்சிலர் பதவிக்கு நின்றார் என்ற பட்டியல்களை கொடுக்கின்றேன். மத்திய அரசினுடைய திட்டங்களை கொள்ளையடிப்பதற்காக மட்டுமே கடந்த 10 ஆண்டு காலத்தை பயன்படுத்தி இருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours