இதற்கான தண்டனையை எடப்பாடி பழனிசாமி அனுபவிப்பார்…. டிடிவி தினகரன் !

Spread the love

பாஜகவை விட்டு விலகியதற்கான தண்டனையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனுபவிப்பார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அமமுக தேர்தல் கூட்டணி குறித்து டிசம்பரில் அறிவிப்பு வெளியிடப்படும். அப்படி கூட்டணி இல்லையென்றால் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம். ஒரு கட்சி வளர்வதற்காக மற்ற கட்சியை வளர விடாமல் தடுக்கின்றன என குற்றசாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் தலை தூக்கியுள்ளது. திமுக ஆட்சி மீது தமிழக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். விரைவில் இதற்கான பாடத்தை புகட்டுவார்கள், எடப்பாடி பழனிசாமி செய்த ஊழல் மற்றும் தவறுகள் திமுகவுக்கு மக்கள் வாக்களித்தனர். பாஜக உதவியதால் தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தினர். பாஜகவை விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி யாரோடு மெகா கூட்டணி அமைக்க போகிறார்கள். அதிமுக வரும் காலத்தில் நெல்லிக்காய் மூட்டை போல சிதற போகிறது என விமர்சித்தார்.

இதனிடையே, அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி பங்கீடு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில், அதிமுக, திமுக தான் பிரதான கட்சிகளாக உள்ளன. இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.

இது பாஜகவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக வெளியேறியதால் புதிய கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேவேளையில், வரும் தேர்தலில் புதிய கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்குவோம் என அதிமுக தெரிவித்துள்ளது. இதனிடையே, பாஜக முடிவை பொறுத்து கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் வரும் நாடாளுமன்ற தேர்தலை டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவுடன் இணைந்து சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்த விவரம் டிசமபர் மாதம் அறிவிக்கப்படும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். எனவே, டிடிவி – ஓபிஎஸ் கூட்டணியில் உருவாகுமா? அல்லது பாஜகவுடன் கைகோர்க்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours