ஜனநாயக கடமையாற்றிய முதியவர்கள் !

Spread the love

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான முதியோர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம், புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், குடிநீர் உள்ளிட்ட வாக்களர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது. மேலும், வாக்களர்கள் வெயிலில் நிற்காமல் இருப்பதற்காக, சாமியான பந்தலும் போடப்பட்டிருந்தது. இருந்தாலும், பெரும்பாலான மையங்களில், குடிநீர் வசதி, இருக்கை வசதிகள் போதுமானதாக இல்லை என வாக்காளர்கள் குற்றம் சாட்டினர்.

முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது ஓட்டை பதிவு செய்தனர். குறிப்பாக, தள்ளாடும் வயதிலும் ஏராளமான முதியோர் தங்களது ஜனநாயக கடமை ஆற்றினர். முதியோருக்காக வாக்குச்சாவடி மையத்தில் சக்கர நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வாக்குச்சாவடி மையத்துக்குள் நுழைந்ததும், அதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர்கள், முதியோரை சக்கர நாற்காலியில் அமர வைத்து, வரிசையில் காத்திருக்காமல் ஓட்டு பதிவு செய்ய உதவினர். சென்னையில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், முதியோர் வீட்டில் முடங்கி இருக்காமல், ஆர்வமுடன் குடும்பத்தினர் உதவியோடு வாக்குச்சாவடி மையத்துக்கு வருகை தந்து தங்களது ஓட்டை பதிவு செய்தனர்.

ஒரு சில இடங்களில், வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல், வாக்குச்சாவடி மையங்களிலே அமர்ந்து முதியோர் பலர் ஓய்வெடுத்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours