நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றுலாப் பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரில் 7 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஊரே சோகத்தில் மூழ்கியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலிருந்து ஊட்டிக்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலாவிற்கு சென்றவர்கள் நேற்று (30-9-2023) தென்காசிக்கு திரும்பும் வழியில், சுற்றுலாப் பேருந்து நீலகிரி மாவட்டம், குன்னூர், பர்லியாறு அருகே வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது .
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த முப்புடாதி (வயது 67), முருகேசன் (வயது 65), இளங்கோ (வயது 64), தேவிகலா (வயது 42),கௌசல்யா (வயது 29) மற்றும் நிதின் (வயது 15) ஆகியோர் உள்ளிட்ட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நிவாரணமும் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரில் 7 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற செய்தி ஊரையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்று மாலை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது .
இதில் மனதை உருக்கும் தகவல் என்னவென்றால் விபத்தில் உயிரிழந்த இளங்கோ (64), கௌசல்யா (29) இருவரும் தந்தை – மகள் என்றும் இவர்களின் சொந்த ஊரான தென்காசி கீழக்கடையத்தில் ஆசை ஆசையை கட்டிய புதிய வீட்டில் கிரகப்பிரவேசம் முடித்து விரைவில் குடியேற இருந்த நிலையில், தந்தை – மகள் விபத்தில் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours