சென்னை முழுவதும் விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைப்பு !

Spread the love

விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 19ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்பொழுது, சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். மேலும், வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகளை கடல், குளம் போன்ற நீர் நிலைகளில் கரைப்பார்கள்.

இந்நிலையில், இன்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வு நடைபெற இருக்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல இடங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் மட்டும் 16,500 போலீசார் மற்றும் 2,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சதுர்த்தி ஊர்வலத்தின் எந்தவித அசம்பாவிதம் ஏற்படமால் கண்காணிக்க போலீசாருக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுக்க கடந்த சில நாட்களாக சிலருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி, ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட தேதி மற்றும் நேரங்களில் தாங்கள் வழிபாடு செய்து வந்த விநாயகர் சிலைகளை கடலில் கரைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours