மணலும் உனக்கு, பணமும் உனக்கு, ஆருத்ராவும் உனக்கு, அகில உலக 8.5 லட்சம் ஓசி ஸ்கேம்ஸ்டார் என்று பாஜக தலைவர் அண்ணாமலையை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உதயநிதி Vs அண்ணாமலை:
தமிழ்நாடு சட்டசபை தேர்தலின் போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதுடன் சரி.. கட்டிடம் கட்டப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கல் பிரசாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதற்க்கு உதயநிதிக்கு பதிலடி தரும் வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் திமுகவின் தேர்தல் வாக்குறுதியான மதுரை வேளாண் பல்கலைக் கழகம் எங்கே? என ஒரு செங்கல்லை கையில் எடுத்து பேசுவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில்,மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கான முன் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது விவாத பொருளாக மாறியுள்ளது.
அமைச்சர் உதயநிதி விமர்சனம்:
MaduraiAIIMS மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கான முன் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது ஒன்றிய அரசு.
ஒன்றிய அரசு ஒற்றை செங்கலை வைத்து நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் கட்டுமானப் பணிக்காக முன் டெண்டருக்கே இத்தனை கால தாமதம் ஆகிறது என்றால் மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்?
எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தாமதப்படுத்தி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் யென விமர்சித்து இருந்தார்.
பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்:
கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதும், அதற்கான அவகாசத்தை நீட்டிப்பதும் வழக்கமான நடைமுறைதான். ஜூனியர் அமைச்சரான உதயநிதி விளையாட்டுத்தனமாக இருக்காமல், தன் கட்சியில் உள்ள சீனியர் அமைச்சர்களிடம், அமைச்சரவை நடைமுறைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வது நலம். ஆனால், கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனத்துக்கே, மறுபடியும் ஒப்பந்தம் வழங்கும் திமுகவின் நடைமுறைகள், உலகத்தில் எங்குமே இல்லாத வழக்கம்.
திமுக விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், 2026 ஆம் ஆண்டு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் திறந்து வைப்பது உறுதி.
மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 54 இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இன்னும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை என்பதை, விளையாட்டுத் துறை அமைச்சருக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மணலும் உனக்கு, பணமும் உனக்கு, ஆருத்ராவும் உனக்கு, அகில உலக 8.5 லட்சம் ஓசி ஸ்கேம்ஸ்டார் என்று பாஜக தலைவர் அண்ணாமலையை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காயத்ரி ரகுராம் விமர்சனம்:
என்ன அண்ணாமலை, உன் கண்ணில் பயம் தெரிகிறது. 2026இல் தான் எய்ம்ஸ் வரும் என்று இப்போது புதிய உருட்டு ஆனால் அது 2023 இல் செயல்படும் என்று பிஜேபியால் உறுதியளிக்கப்பட்டது. பஜகாவை பொட்டு கொடுக்க ஆரம்பித்து விட்டீர்கள். இப்போது மெல்ல மெல்ல பாஜகவுக்கு துரோகம் செய்ய ஆரம்பித்துவிட்டீர்கள், வாழ்த்துக்கள்.
தேவையற்ற விஷயங்களைப் பேசுவது பாஜகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று உனக்கு அது நல்ல தெரியும். கணக்கை முழுமையாக மூட முயற்சிக்கிறீர்களா, புதிய கட்சி தொடங்குகிறீர்களா? மணலும் உனக்கு, பணமும் உனக்கு, ஆருத்ராவும் உனக்கு, அகில உலக 8.5 லட்சம் ஓசி ஸ்கேம்ஸ்டார், நீ தான் நல்ல செட்டிலாயிட்டியே. வாழ்த்துக்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
+ There are no comments
Add yours