காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன என்று அம்மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..
“காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந்தேதி அன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.
கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.
மேலும் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், 2023-24-ம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல் திட்டத்தை பொது மக்களுக்கு அறிவித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்கப்படும்.
மேலும், கிராம ஊராட்சிகள். தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்திட வேண்டும். பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு செலவு கணக்கு வைக்கப்பட வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours