சனாதனம் ஒழிப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்(udhayanidhi) தெரிவித்த கருத்து I.N.D.I.A கூட்டணி கட்சியான ஆம் ஆத்மி எம் பி ராகவ் சாதா கடும் கண்டனம் தெரிவித்து இருப்பதுஅரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி மாநாட்டில் பேசுகையில், ‘சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று நீங்கள் போட்டுள்ளீர்கள். சிலவற்றை ஒழிக்கத்தான் வேண்டும் எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க கூடாது.
ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம்’ என பேசியது பாஜவினர் மத்தியில் கண்டனம் எழுந்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சுக்கு I.N.D.I.A கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பேனர்ஜி கடுமையாக விமரிசித்து இருந்தார்.
இந்த நிலையில், ஆம் ஆத்மி எம் பி ராகவ் சாதா தெரிவிக்கையில்,
‘நான் சனாதன தர்மத்தை ஆதரிப்பவன். சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சை கண்டிக்கிறேன். எதிர்க்கிறேன். எந்த மதத்தின் மீதும் இதுபோன்ற கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும். அனைத்து மதங்களையும் நாம் மதிக்க வேண்டும்.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பெரிய பிரச்னைகளை எதிர்கொள்ளவே இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் இருக்கும் சிறிய தலைவர்கள் கூறிய கருத்து கூட்டணியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக ஆகாது’ என்றுகூறியுள்ளார்.
+ There are no comments
Add yours