சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் துரைமுருகன், இந்த நாட்டில் தற்போது என்னென்னமோ நடந்து வருகிறது. திடீரென நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட போகிறது என்கிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே மாதம், ஒரே ஆட்சி, ஒரே பிரதமர் மற்றும் நாட்டின் பெயர் பாரத் என கூறுகிறார்கள்.
இது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?.. நாடு எங்கே போய் நிற்கும் என தெரியவில்லை. நாடு எங்கேயோ போகிறது, எங்கே போய் நிற்கும் என்று தெரியவில்லை. ஒருவேளை சட்டமன்றத்தை கலைத்துவிட்டு அமெரிக்க அதிபர் போல் மோடி வர விரும்புகிறாரோ? என தெரியவில்லை எனவும் விமர்சித்தார்.
இந்த நாடு யாருடைய சொந்தமும் அல்ல, நாட்டின் பெயரை மாற்றலாம் தவறு இல்லை, ஆனால் அதனால் என்ன பலன் இருக்கு, எதற்காக மாற்ற வேண்டும். ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து இந்தியா என்று தான் கூறி வருகிறோம். இப்போது திடீரென மாற்றுவதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றினோம். ஏனென்றால், இந்து தமிழ் பேசும் தேசம், கலாச்சாரம் என பல்வேறு வரலாறுகள் இங்கு உள்ளது. ஆனால், பாரத்துக்கு என்ன உள்ளது. எனவே, குறுகிய மனப்பான்மை உடையவர்களிடம் ஆட்சி கிடைத்துவிட்டதால் நாடு படாதப்பாடுபடுகிறது என்றார். மேலும், இந்த மண்ணில் பிறந்தவர்களை எப்படி சிறும்பான்மையினர் என்று சொல்வது? கேள்வி எழுப்பிய அமைச்சர், சிறுபான்மையினருக்கு எப்போது ஆபத்து வந்தாலும் திமுக உடனே வந்து நிற்கும் எனவும் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours