நீட் விலக்கு பற்றிய தமிழக அரசின் தீர்மானத்தை வரவேற்கிறேன் – கல்வி விருது வழங்கும் விழாவில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் பேச்சு.
டிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 2ம் கட்டமாக இன்று விருது, கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி துவங்கி 2026 சட்டப் பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டுள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விருது, கல்வி ஊக்கத் தொகை வழங்கி கவுரவித்து வருகிறார்.
கடந்த மாதம் 28ம் தேதி முதல்கட்டமாக சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் 127 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விருது, ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக இன்று 19 மாவட்டங்களைச் சேர்ந்த 107 தொகுதிகளைச் சேர்ந்த 642 மாணவ, மாணவிகளுக்கு இன்று, விருது மற்றும் கல்வி ஊக்கத் தொகைகளை தவெக தலைவர் விஜய் வழங்க உள்ளார். இதையொட்டி அவர் இன்று அதிகாலையிலேயே விழா நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்தார்.
அங்கு பேசிய அவர், நீட் விலக்கு பற்றிய தமிழக அரசின் தீர்மானத்தை வரவேற்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
+ There are no comments
Add yours