2026 ல் திமுகவை வீட்டிற்கு அனுப்பினால் தமிழக மக்களுக்கு புண்ணியம் கிடைக்கும் -தமிழிசை சவுந்திரராஜன்

Spread the love

சென்னை: ஊழல் செய்வதையே குடும்பத்தொழிலாக்கி ஏழை, எளிய மக்களின் பாவங்களை சேர்த்த நிர்வாக திறனற்ற திமுகவை 2026 ல் வீட்டிற்கு அனுப்புவதே தமிழக மக்களுக்கு கிடைக்கும் புண்ணியம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ” * விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் பட்டம் பெற்ற திமுக… சர்க்காரியா கமிஷன் அமைத்து ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்ட ஒரே ஆட்சியென்றால் அது திமுக ஆட்சிதான்…

  • திமுக ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்த்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த பாவங்களை சேர்த்த திமுக…
  • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததால் அவர்களின் குடும்பத்தினரின் பாவத்தை சேர்த்தது திமுகதான்..
  • வேங்கைவயலில் மலம் கழந்த தண்ணீரை ஊர் மக்கள் அருந்தி பெரும் இன்னலுக்குள்ளானதை இன்றளவும் யார் அதை செய்தது என்று கண்டுபிடிக்க முடியாமல் ஊர் மக்களின் பாவத்தை வாங்கிக்கொண்ட திமுக… பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமல் அம்பேத்கரை பற்றி பேசுவது நியாயமா?
  • சென்னையில் ரூ.4,000 கோடியில் மழைநீர் வடிகால்களெல்லாம் அமைத்து விட்டோம் என்று கூறிக்கொள்ளும் திமுக… மழைக்காலங்களில் மக்கள் படும் இன்னல்கள்… உடைமைகளெல்லாம் இழந்து தண்ணீரில் தத்தளிக்கும் மக்களின் பாவங்களை வாங்கிக் கொண்டது திமுகதான்…

ஊழல் செய்வதையே குடும்பத்தொழிலாக்கி ஏழை,எளிய மக்களின் பாவங்களை சேர்த்த நிர்வாக திறனற்ற திமுகவை 2026ல் வீட்டிற்கு அனுப்புவதே தமிழக மக்களுக்கு கிடைக்கும் புண்ணியம்’ என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours