மக்களவைத் தேர்தலில் பாமக விட இரண்டு மடங்கு அதிக வாக்குகளை அதிகம் பெற்று நாம் தமிழர் கட்சி கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்த மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்றுள்ளது. அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு தொகுதிகளில் கூட வெற்றிபெறவில்லை. ஆனாலும், தமிழக எதிர்க்கட்சிகளின் வாக்கு சதவீதம் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிமுக 20.46 சதவீதமாகவும், , பாஜக11.24 சதவீதமாகவும் உயர்ந்துள்ளன. அதேபோல் நாம் தமிழர் கட்சியின் வாக்கு 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஆனால், 10 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மொத்தமாக 4 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட அபிநயா பெற்ற வாக்குகள் 65,381 பெற்றார்.
இந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து களம் கண்டது குறிப்பிடத்தக்கது.. மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவி டெபாசிட் தொகையையும் இழந்தது. இருப்பினும் ஆறு தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், ஈரோடு, திருச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் மூன்றாம் இடத்தை நாம் தமிழர் கட்சி பிடித்துள்ளது. இதில் இரண்டு இடங்களில் அதிமுகவையும் , இரண்டு இடங்களில் தமிழ் மாநில காங்கிரஸையும் , தலா ஒரு இடங்களில் பாஜக, பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. மீதமுள்ள 33 தொகுதிகளிலும் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
குறிப்பாக பாமகவை விட தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி இரண்டு மடங்கு அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது. கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்ட நிலையில் மைக் சின்னத்தில் நின்று சில மாத பிரச்சாரத்திலேயே இவ்வளவு வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours