தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 40க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த சூழலில் தமிழ்நாட்டில் உள்ள பல மருத்துவக் கல்லூரிகளுக்கு மூன்று லட்சம் ரூபாய் அபராதத்தை தேசிய மருத்துவ ஆணையம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவக் கல்லூரிகள்தான் திமுக ஆட்சிக் காலத்தில் அதிகளவில் தொடக்கப்படவில்லை. தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளக் கூட திமுக அரசால் முடியவில்லை. 2023ஆம் ஆண்டு பயோமெட்ரிக் வருகை இல்லாதது, புகைப்பட கருவிகள் சரியாக இயங்காதது போன்ற காரணிகளால் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் அளவுக்கு நிலை இருந்தது. இந்த குறைபாடுகள் இந்த ஆண்டிலும் தொடர்கின்றன. செயலற்ற ஆட்சி என்பதற்கு இதைவிட ஒரு எடுத்துக்காட்டுத் தேவையில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
கால்களில் வீக்கம்.. திருமாவளவனுக்கு பெங்களூருவில் சிகிச்சை – விசிகவினருக்கு முக்கிய அட்வைஸ்!
தொடர்ந்து, “இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர், 75 சதவிகிதத்திற்கு குறைவாக மருத்துவப் பேராசிரியர்கள் இல்லை என்றால் விளக்கம் கேட்டு அறிவிப்புகள் பெறப்படும் என்றும், இதன் அடிப்படையில், தேசிய மருத்துவ ஆணையத்திடமிருந்து அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளன என்று, தேர்வுப் பணி, ஆய்வுப் பணி போன்ற காரணங்களால் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேட்டில் மருத்துவப் பேராசிரியர்கள் கையெழுத்திடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தேசிய மருத்துவ ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார்.
அதே சமயம் இதுபோன்ற அபராதம் விதிக்கப்படும் முன்பு தொடர்புடைய மருத்துவக் கல்லூரிகளுக்கு 2 முறை விளக்கம் கேட்டு அறிவிப்புகள் அனுப்பப்படும் என்றும், விளக்கங்கள் திருப்தி அளிக்காத பட்சத்தில், கல்லூரி நிர்வாகத்தினருக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படும் எனவும், அதற்கு பின்பே அபராதம் விதிக்கப்படும் என்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவக் கல்வி வாரியத் தலைவர் தெரிவித்து உள்ளார் என்றும் சுட்டிக்காட்டினார் ஓபிஎஸ்.
மேலும், “மருத்துவக் கல்வி இயக்குநரின் கூற்றையும், தேசிய மருத்துவ ஆணைய அதிகாரியின் கூற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, முறையான, நியாயமான விளக்கம் தமிழக அரசு சார்பில் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அளிக்கப்படவில்லை என்பதும், போதுமான டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை என்பதும் தெளிவாகிறது.
ரொம்ப கவனமா இருங்க.. ஓட்டுனர்களுக்கு வார்னிங் போட்ட போக்குவரத்துக் கழகம்!
மாணவர்களின் நலன் கருதி கொண்டு, முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்தி, தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளுக்கேற்ப தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், இனி வருங்காலங்களில், அங்கீகாரம் ரத்தாகும் நிலை, அபராதம் விதிக்கும் நிலை போன்றவற்றிற்கு மருத்துவக் கல்லூரிகள் தள்ளப்படாது இருப்பதை உறுதி செய்யவும் நட வடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
+ There are no comments
Add yours