கைமாறுகிறது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்- இனி என்னவாகும் சிஎஸ்கே ?

Spread the love

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருந்தவருமான நாராயணசாமி ஸ்ரீனிவாசன் தனது நிறுவனத்தின் 32.72 சதவீத பங்குகளைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை விற்றார். ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.390 என்ற விலை கொடுத்து மொத்தமாக ரூ.3,954 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. விற்கப்பட்ட பங்குகளில் ஸ்ரீனிவாசனின் பங்கு மட்டுமே ரூ.2,656 கோடி மதிப்புடையது ஆகும். ஈர்ப்பிக்கவே இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 22 சதவீத பங்குகளை அல்ட்ரா சிமெண்ட்ஸ் நிறுவனம் வைத்துள்ளதால், நிர்வாகம் கைமாற உள்ளது.

இந்நிலையில் தனது சிஇஓ பதவியிலிருந்து விலகும் ஸ்ரீனிவாசன் நேற்று நடந்த பிரிவு உபசார விழாவில் உணர்ச்சி பொங்க விடைபெற்றுள்ளார். மேலும் ஊழியர்கள் மத்தியில் பேசிய அவர், ‘நிர்வாகம் வேறு கைகளுக்கு மாறுவதால் ஊழியர்கள் யாரும் தயங்கத் தேவையில்லை. இப்போது நம் நிறுவனத்தில் இருக்கும் பாலசிகளும், நடைமுறைகளும் எந்த விதத்திலும் மாற்றப்படாது என்ற உறுதியை அல்ட்ரா டெக் நிறுவனத்திடம் பெற்றுள்ளேன்’ என்று தெரிவித்தார்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமானது (ICL) கடந்த 1946 ஆம் ஆண்டு எஸ்.என் சங்கரலிங்க அய்யர் மற்றும் டி.எஸ் நாராயண ஸ்வாமி ஆகியோரால் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியில் தொடங்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு தந்தை நாராயண ஸ்வாமியின் மறைவுக்குப் பின் தனது 23 வது வயதிலேயே ஸ்ரீனிவாசன் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்ட்டராக பொறுப்பேற்றார்.

அவரது தலைமையில் இந்தியா சிமிண்ட்ஸ் தென்னிந்தியாவின் முன்னணி சிமெண்ட் நிறுவனமாக உருவெடுத்தது. இந்நாள்வரை அந்த தலைமைப் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த ஸ்ரீனிவாசன் தலைமையிலானஇந்தியா சிமெண்ட்ஸ் போட்டி அதிகரித்ததாலும், விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களாலும் நிறுவனம் நொடித்துள்ளது. இதனாலேயே ஸ்ரீனிவாசன் பங்குகளை விற்கும் முடிவை எடுத்துள்ளார்.

ஸ்ரீனிவாசனின் கிரிக்கெட் ஆர்வம் அளப்பரியதாகும். இன்று கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியை உருவாக்கியவர் ஸ்ரீனிவாசன். மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் [ஐ.சி.சி] தலைவராகவும், இந்திய கிரிக்கெட் கவுன்சிலான் பி.சி.சி.ஐ தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் ஆவார். தற்போது ஸ்ரீனிவாசன் இந்தியா சிமெண்ட்ஸை விட்டு வெளியேறியுள்ள நிலையில் சிஎஸ்கேவை நிர்வகிக்கக்போகும் நிறுவனம் என்ற சிக்கலும் எழுந்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours