சமூக நீதியுடன் கூடிய தொழில் வளர்ச்சி !

Spread the love

சமூகநீதியுடன் கூடிய சமச்சீர் தொழில் வளர்ச்சி என்பதே தமிழ்நாடு அரசின் கொள்கை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் திருவிழாவில் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றிய அவர், 2021 மார்ச் மாத நிலவரப்படி, சுமார் 2300 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்ததாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 800க்கு மேல் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

புத்தாக்கச் சிந்தனையோடு தொழில் முனைவில் ஈடுபடுகிற, தொடக்க நிலைப் புத்தொழில் நிறுவனங்களுக்கு, ‘டான்சீட்’ எனும் தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி வழங்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 109 நிறுவனங்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாய் வீதம், 10 கோடி ரூபாய்க்கும் மேல், நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, பெரு நகரங்களைத் தாண்டி, மாநிலத்தின் எல்லாப் பகுதிகளையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, கடந்த ஆண்டில் மதுரை, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய நகரங்களில், வட்டாரப் புத்தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நடப்பு நிதி ஆண்டில் சேலம், ஓசூர், கடலூர், தஞ்சாவூர் நகரங்களிலும் வட்டாரப் புத்தொழில் மையங்கள் நிறுவப் பணிகள் நடந்து கொண்டு இருப்பதாகத் தெரிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours