வெளியாகிறதா துணை முதல்வர் அறிவிப்பு ?- நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டம்

Spread the love

தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் 1 மணி நேரத்திற்கு மேலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நிறைவு. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்

அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு மாற்றம் ஒன்றே மாறாதது என கூறியிருந்தார் முதல்வர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அண்மையில் முதல்வர் ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றபோது, துணை முதல்வர் பதவி அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, திமுக மூத்த அமைச்சர்கள் வரை அனைவரும், அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். ஆனால் அப்போது வழங்கப்படவில்லை. இந்த நிலையில், இன்று காலையில் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், இதற்காக சென்னை அண்ணா அறிவாலத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் பரவின.

இந்நிலையில் தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் 1 மணி நேரத்திற்கு மேலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தினார். உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து அதில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னர் அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு மாற்றம் ஒன்றே மாறாதது என கூறியிருந்தார் முதல்வர். அதனால் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்து எந்நேரமும் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours