கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டத்தினை பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை என்று ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தமிழக ஆளுநர் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில்,தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் வடிவமைத்த பொது பாடத் திட்டத்தை அமல்படுத்துமாறு மாநில உயர்கல்வித் துறை கட்டாயப்படுத்துவதாக கல்லூரிகளின் முதல்வர்கள், பல்கலைக் கழக துணைவேந்தர்கள் உள்ளிட்டோர் கவலை தெரிவித்துள்ளதாக பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிகளை அதன் தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள், தங்களுக்கான பாடத் திட்டத்தை தாங்களே வடிவமைத்துக் கொள்ளலாம் என்று பல்கலைக் கழக மானியக் குழுவின் விதியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours