கள்ளக்குறிச்சி.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு !

Spread the love

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்வரன்குமார் ஜடாவத், எஸ்பி- சமய்சிங் மீனா மற்றும் காவல் துறை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெத்தனால் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பதை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. மெத்தனால் இருப்பை கண்டறிந்து முழுமையாக அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற கள்ளச்சாராய விபரீத சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணை ஆணையம் 3 மாதங்களில் பரிந்துரையை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours