மகளிருக்கு ரூ.1,000 உதவித்தொகை நான் கொடுத்த ஐடியா… போட்டுடைத்த கமல்ஹாசன் !

Spread the love

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட மகளிர் உதவித்தொகை திட்டம் நான் கொடுத்த ஐடியா தான் என பொது நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் பேசியிருப்பது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பிரபல கல்லூரியில் நடைபெற்று வரும் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கூறியதாவது :

மாணவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டால் ஜனநாயகம் வாழும். உங்களுக்கெல்லாம் வாக்களிக்கும் வயது வந்துவிட்டது. கையில் மை வைக்கப்படுவதற்கு முன் யாரைத் தேர்தெடுக்கிறோம் என்ற விழிப்புணர்வு வேண்டும்.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை நான் தந்த யோசனை. எனது யோசனையை தமிழக அரசு எடுத்துக் கொண்டாலும் பொறாமைப்படாமல் அதை வரவேற்கிறேன் மனதார பாராட்டுகிறேன்.

மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு என்பதில் எத்தனை சதவீதம் நிஜம்? ஏனென்றால் பெண்கள் பதவி பெற்றாலும் ஆண்கள் தான் ஆதிக்கம், அதிகாரம் செலுத்துகிறார்கள் அது பெண் சுதந்திரம் ஆகாது,முழுமையானது ஆகாது. முழுமையாக கொடுத்து விட்டால் 50 சதவீதம் 5 வருடத்தில் வரும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours