நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும்- மதுவிலக்கு பற்றி அமைச்சர் துரைமுருகன்.

Spread the love

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் பரவலாக மதுவிலக்கு பற்றிய பேச்சு எழுந்திருக்கிறது. அதற்கு பதிலளித்து பேசியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன் .

பலரும் பூரண மதுவிலக்கு பற்றி பேசுகின்றனர், ஆனால் அப்போதே கருணாநிதி கூறியிருந்தார்; கர்நாடகா,கேரளா, ஆந்திரா,புதுச்சேரி என சுற்றி இருக்கும் மாநிலங்களில் மதுவிற்கும் போது தமிழ்நாடு மட்டும் எப்படி பற்றிக் கொள்ளாத கற்பூரமாக பாதுகாக்கப்பட முடியும்?

உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. ஆனால் அரசாங்கம் விற்கும் மதுவில் அவர்களுக்கு தேவையான கிக் இல்லாததால், கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர்.

அரசாங்கம் விற்கும் சரக்கு அவர்களுக்கு SOFT DRINK போல மாறிவிடுகிறது. எனவே விட்டில் பூச்சி விளக்கில் போய் விழுவதை போன்று விழுந்து செத்து விடுகின்றனர். அதற்காக தெருவுக்கு தெரு போலீஸ் ஸ்டேஷன் திறக்க முடியாது. மனிதனாய் பார்த்துத் தான் திருந்த வேண்டும்.

கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போகும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என்று கூட சட்டம் இயற்றலாம்.
ஆனால் எல்லாத்துக்கும் ஒரு நியாயம் இருக்க வேண்டும்; நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என்று கூறியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours