சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை முன்னிட்டு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். அதில், “முதல் மாநில மாநாடு நடைபெறும் வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம்.ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி இல்லை என்பதை மாநாடு மூலம் நாம் நிரூபிப்போம்,”இவ்வாறு தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலை பகுதியில் வருகிற 27 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இன்று பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்த பூஜையில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இன்று அதிகாலை 4:30 மணியளவில் பந்தல்கால் நடும் பூஜை நடைபெற்றது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் நிலையில் தற்போது நடிகர் விஜய் ஒரு முக்கிய அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நம்முடைய ஒற்றுமையை நம்முடைய வலிமை என்பதை நாட்டிற்கு உணர்த்தும் வகையில் முதல் மாநாடு பணிகளை சிறப்பாக நடத்த வேண்டும் என அவர் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு அறிக்கையில் மாநாட்டுக்கான நாட்களை மனம் என்ன தொடங்கிவிட்டது எனவும் இந்த மாநாட்டில் அனைத்து தொண்டர்களும் கடலென திரண்டு வரவேண்டும் எனவும் நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும். இன்னமும் முழுமை பெறாத அவர்களுக்காக நாம் பாடுபட வேண்டும். நம்முடைய முதல் மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கைகளை பிரகடனப்படுத்தும் மாநாடு. இன்னும் சரியாக சொல்லப்போனால் இது நம்முடைய வெற்றிக் கொள்கை திருவிழா. இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா.? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா.? களத்தில் இருந்து வென்று காட்ட முடியுமா என்று ஏகப்பட்ட கேள்விகளை அதிருப்தியாளர்கள் நம் மீது வீசி வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் இன்று பந்தக்கால் பூஜை சிறப்பாக நடைபெற்றது எனவும் இனிவரும் மாநாட்டில் அனைத்து தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனும் கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours