சமூகத்தை பாழ்படுத்தும் குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்.. முதல்வர் பதிவு !

Spread the love

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், ‘சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ‘கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 40க்கும் மேற்பட்டோர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரவண்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அம்மாவட்ட காவல் கண்காணிப்பாள சமய்சிங் மீனாவையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அனைவரையும் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு காவல்துணை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக எம்.எஸ்.பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கை தீர விசாரிப்பதற்காக சிபிசிஐடி வசம் ஒப்படைப்பதாக தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours