நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் உருவாகி அண்மையில் வெளியான மார்க் ஆண்டனி படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரம் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புரட்சி தளபதி விஷால் மற்றும் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் மார்க் ஆண்டனி . ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்புக்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது வசூல் மழை பொலிந்து வருகிறது .
இளசுகள் கொண்டாடும் வகையில் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக தயாராகியுள்ள இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று தற்போது பிளாக் பஸ்டர் படமாக உருவெடுத்துள்ளது .
காட்சிக்கு காட்சி வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் இப்படம் விஷாலின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் என திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் விஷால் திரைப்பயணத்திலேயே இதுவரை எந்த படமும் செய்யாத வசூலை மார்க் ஆண்டனி திரைப்படம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது .
இந்நிலையில் இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக திரைவட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர் . இருப்பினும் இதுவரை படக்குழுவிடம் இருந்து வசூல் விவரம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours