வெளிநாடு செல்லும் தமிழர்களை கண்காணிக்க புதிய ஆப்.!

Spread the love

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான தாக்குதல் 9வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதில் தற்போது இஸ்ரேல் கையே ஓங்கி நிற்கிறது. ஹமாஸ் அமைப்பை விட பலம் வாய்ந்த இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

தொடர் தாக்குதல், போர் பதற்றம் காரணமாக, இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு. ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து 3வது நாளாக இதுவரை 4 விமானங்கள் மூலம் 918 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.

இதில் இஸ்ரேலில் சிக்கி தவித்து, டெல்லி வந்த தமிழர்கள், தமிழக அரசின் நடவடிக்கையால் தமிழகம் வரவழைக்கப்பட்டனர். இந்த மீட்பு நடவடிக்கை குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுவரை 110 தமிழர்கள் தமிழகம் வந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இஸ்ரேலில் படிப்பதற்காக சென்று போர் காரணமாக பாதியில் வந்தவர்களின் படிப்பு விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று, அவர்கள் கல்வியை தமிழகத்தில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை என ஒரு துறை இருக்கிறது. அதே போல, திமுகவிலும் 3 திமுக எம்பிக்கள் கட்டுப்பாட்டில் வெளிநாட்டு தமிழர்கள் அயலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது வெளிநாட்டிற்கு எவ்வளவு தமிழர்கள் படிப்புக்காக சென்றுள்ளனர், எவ்வளவு பேர் வேலைக்காக செல்கிறார்கள் என மொபைல் ஆப் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் நலன் குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours