மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின்போது கூட்டத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது
சென்னை: மெரினா கடற்கரையொட்டிய வான்வெளியில் இந்திய விமானப்படை நடத்திய சாகச நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடினர். இதில், நூற்றுக்கணக்கானோர் மயக்கமுற்றனர் . மேலும் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின்போது கூட்டத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. வெயில் காரணமாக மயக்கமடைந்தவர்கள், சிகிச்சைக்கு பிறகு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெயிலால் மயக்கமடைந்த ஒருவர்கூட ராயப்பேட்டை, ஓமந்தூரார் மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours