நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை.. துரை வைகோ அறிவிப்பு!

Spread the love

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி மதுரையில் மதிமுக மாநாடு கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, 30 ஆண்டுகளாக அண்ணாவின் பிறந்தநாளை மாநாடாக கொண்டாடும் ஒரே இயக்கம் மதிமுக. மதிமுகவை உயர்ந்த இடத்துக்கு எடுத்து செல்லும் கடமை அனைவருக்கும் உள்ளது. 20 வயதில் பொதுவாழ்வு பயணத்தை துவங்கிய வைகோவின் பயணம் 60 ஆண்டுகள் கடந்தும் இன்றும் தொடர்கிறது.

அவரது உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளரவில்ல. இறுதி மூச்சுவரை அவரது உயிர் இயக்கத்துக்காக துடித்துக்கொண்டே இருக்கும் என அரசியலில் தனது தந்தை பட்ட கஷ்டங்களையும், துயரங்களையும் நினைவுகூர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போதே கண் கலங்கிவிட்டார். தொடர்ந்து பேசிய அவர், 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற விவாதம் தொண்டர்கள் இடையே நடக்கிறது.

அதாவது, நான் விருதுநகரில், திருச்சியில், பெரம்பலூரில் போட்டியிட வேண்டும் என்று விவாதம் நடைபெறுகிறது. ஆனால், எனக்கு தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. இயக்கத்துக்கு பக்க பலபமாக இருப்பவர்களை தேர்ந்தெடுங்கள், அவர்களை தேர்தலில் போட்டியிட வையுங்கள் என கட்சி தலைமைக்கும், நிர்வாகிகளுக்கும் கோரிக்கை வைத்தார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகு மதிமுக புதிய பொழிவுடன், புதிய உத்வேகத்துடன் செயல்படுகிறது என்ற செய்தியை கேட்க வேண்டும் என்றார். மதிமுக எங்கே இருக்கிறது என்று ஏளனம் செய்தவர்களுக்கு மத்தியில் ஃபீனிக்ஸ் பறவையை போல் மதிமுகவை தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ வைப்போம் என்ற சபதத்தை ஏற்போம்.

இந்த இயக்கம் கொடுத்த முதன்மை செயலாளர் பதவி கூட தேவையில்லை. திமுக தொண்டன் என்ற ஒரு அடையாளம் போதும். இந்த உன்னதமான அடையாளத்தை விட பெரிதும் இந்த உலகில் வெறும் இல்லை. இந்த இயக்கம் பல்லாயிரக்கணக்கான சகோதர, சகோதிரிகளின் அன்பும் அரவணைப்பும் எனக்கு கொடுத்துள்ளது. இதனை விட உலகில் பெரிது எனக்கு வேறு எதுவும் இல்லை என கண் கலங்கியபடி பேசினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours