இந்திய இயற்கை மருந்துகள் மீது கென்யா ஆர்வம்

Spread the love

இயற்கை மருந்து ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ராஜேந்திரன் ஆனைமுத்துவை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் NPI (NATURAL PRODUCTS INDUSTRY) தேசிய ஒருங்கிணைப்பாளர் Dr. Taracha N Evans சந்தித்து கலந்துரையாடினார்.

மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளின் முன்னேற்றம் உள்ளிட்டவைகளின் தொழில்நுட்பங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக புகழ் பெற்றவர் பேராசிரியர் ராஜேந்திரன். இவர் இயற்கையான பொருள்களில் இருந்து பிரித்தெடுத்தல், தனிமைப்படுத்தல், சுத்திகரிப்பு, தரப்படுத்தல் மற்றும் உருவாக்கம் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.

ஜனவரி 2002-ல் கோல்ட் பிரஸ் டெக்னாலஜியைப் பயன்படுத்தி அலோவேரா ஜெல்லை வணிகமயமாக்கிய இந்தியாவின் முதல் விஞ்ஞானி பேராசிரியர் ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர் 150 க்கும் மேற்பட்ட கற்றாழை சார்ந்த தயாரிப்புகளை உருவாக்கியுள்ளார்.

இவர்களின் சந்திப்பின்போது, விஞ்ஞான சமூகத்தில் பேராசிரியர் ராஜேந்திரனின் மகத்தான தாக்கங்களை குறித்து Dr. Taracha N Evans பெருமையுடன் பேசினார். மேலும் பேராசிரியர் ராஜேந்திரன் நிச்சயமாக கென்யா வர வேண்டும் எனவும் அழைப்பும் விடுத்தார். அதற்கு பேராசிரியர் ராஜேந்திரனும் கென்யாவுக்குச் செல்வதாக ஒப்புதல் அளித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours