பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு மற்றும், விடுப்பு முடிந்து பணிக்கு திரும்புபவர்களுக்கு அவர்கள் விரும்பும் இடங்களில் பணி ஒதுக்கப்படும் போன்ற சலுகைகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை -எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், காவல் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது..என்பதை அறிவித்தார்.
இந்த விடுமுறை முடிந்து, அவர்கள் பணிக்கு திரும்பும்போது அவர்கள் குழந்தைகளை பராமரிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுவது தொடர்பாக தொடர்ந்து அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அவர்கள் கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் பணிமூப்புக்கு விலக்களித்து, அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டைச் சார்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours