தமிழ்நாட்டில் திருநெல்வேலி – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை நேற்று பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதாவது, உள்நாட்டியில் தயாரிக்கப்பட்ட திதாக 9 வந்தே பாரத் ரயில்கள் திருநெல்வேலி – சென்னை, விஜயவாடா – சென்னை உள்ளிட்ட 11 மாநிலங்களை இணைக்கும் வகையில் சேவைகளை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த ரயில்கள் உதய்பூர்-ஜெய்ப்பூர், திருநெல்வேலி-சென்னை, ஹைதராபாத்-பெங்களூரு, விஜயவாடா-சென்னை (ரேணிகுண்டா வழியாக), பாட்னா-ஹவுரா, காசர்கோடு-திருவனந்தபுரம், ரூர்கேலா-புவனேஸ்வர்-பூரி, ராஞ்சி-ஹவுரா மற்றும் ஜாம்நகர்-அகமதாபாத் ஆகிய வழித்தடங்கள் இடையே இயக்கப்படுகிறது.
நாட்டில் இதுவரை 25 வழி தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக தென் தமிழகத்தில் மிக முக்கியமான மாவட்டம் வழியாக தலைநகரை அடையும் விதமாக (20665/20666) திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை நேற்று துவங்கியுள்ளது. இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் மற்றும் தாம்பரம் ஆகிய 6 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்கிறது.
வாரத்தில் செவ்வாய்கிழமையை தவிர்த்து மற்ற 6 நாட்கள் இயக்கப்படும் என்றுள்ளனர். இந்த நிலையில், நேற்று தொடங்கி வைக்கப்பட்ட, சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவையை, கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நேற்று தொடங்கி வைத்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில், சென்னைக்கும் – திருநெல்வேலிக்கும், சென்னைக்கும் – விஜயவாடாவுக்கும் இடையே இரண்டு புதிய ரயில்கள் உட்பட நாடு முழுவதும் ஒன்பது வந்தே பாரத் ரயில்களை திறந்து வைத்ததற்காக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் தற்போது 12 மணி நேரமாக இருந்து 8 மணி நேரமாக குறைந்துள்ளது என்பது தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இருப்பினும், இதை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று தென் தமிழக மக்கள் விரும்புகின்றனர். எனவே, வந்தே பாரத் விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours