இன்று விக்கிரவாண்டி இடைதேர்தலில் வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. தமிழகத்தின் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களது வேட்பாளர்களை அறிவிப்பதில் மும்மூரம் காட்டி வருகின்றன. அதிமுக இன்னும் தங்கள் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதற்கிடையில் அதிமுகவின் வேட்பாளர் தேர்வு குறித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .
அதில், ‘கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்காமல் கட்சியை கைப்பற்றி கொள்வதிலும், கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையோடு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை களமிறக்கும் முடிவினை அறிவிக்க வேண்டும் ‘ என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
+ There are no comments
Add yours