ஏ.ஆர்.ரகுமான் தமிழகத்தின் பெருமை. இசை நிகழ்வில் நடந்த குளறுபடிகளுக்கான முழு பொறுப்பையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், காவல்துறையும் தான் ஏற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி தெரிவித்துள்ளார்.
சனாதனம் என்பது மதம் சார்ந்ததென்றால், பொறுப்பில் உள்ளவர்கள் அதை இழிவு படுத்தக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடலூர் வாக்குச்சாவடி களப்பணியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை தந்த நிலையில், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக கடலூர் சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஏ.ஆர்.ரகுமான் தமிழகத்தின் பெருமை, மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்வில் நடந்த குளறுபடிகள் நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் பேராசை என்றும், இதற்கான முழு பொறுப்பையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், காவல்துறையம் தான் ஏற்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாமக தங்கள் முடிவை விரைவில் அறிவிப்போம் என தெரிவித்தார். என்எல்சிக்கு எதிராக 35 ஆண்டுகளாக பாமக போராடி வருகின்றது. இவை அனைத்தும் வாக்கு அரசியலுக்காக இல்லை என்றார். தொடர்ந்து சனாதனம் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஒருவர் நம்பிக்கையை மற்றொருவர் இழிவு படுத்தக்கூடாது, சனாதனம் என்பது ஒவ்வொருவரும் புரிந்து கொள்வது.
அது மதம் சார்ந்ததென்றால் அதை இழிவு படுத்தக்கூடாது. பொறுப்பில் உள்ளவர்கள் அதை இழிவு படுத்தக்கூடாது, மதத்தில் உள்ள குறைபாடுகள் களையப்படலாம் தவிர அதனை அழிப்பேன் என்பது பொறுப்பற்ற பேச்சு என்றார்.
தொடர்ந்து “தமிழகத்தில் சாதி ஒழிக்கப்பட வேண்டுமென்றால் முதலில் சாராயத்தை ஒழியுங்கள் என்ற அவர்,
மகளிர் உரிமைத்தொகை திட்டம் நல்லது தான், ஆனால் அப்பணம் திரையரங்கிற்கோ அல்லது மதுகடைகளுக்குத்தான் செல்லும் என அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்தார்.
+ There are no comments
Add yours