சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்தும் தேசிய ஜனநாயக கூட்டலில் இருந்தும் அதிமுக விலகிக் கொள்வதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகம் எம்ஜிஆர் மாளிகையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது
அந்த கூட்டத்தில் அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்
முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின் , பா வளர்மதி, செங்கோட்டையன், ஜெயக்குமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, கோகுல இந்திரா, கேபி முனுசாமி,நத்தம் விஸ்வநாதன், எஸ்பி வேலுமணி திண்டுக்கல் சீனிவாசன், செம்மலை, தம்பிதுரை மற்றும் பல்வேறு தலைமை கழக நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக துணை பொதுச் செயலாளர் கேபி முனுசாமி அப்போது அவர் பேசுகையில்..
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி யின் மாநிலத் தலைவர் கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டு வேண்டும் என்று உள்நோக்கத்துடன் அதிமுகவின் மறைந்த முன்னாள் தலைவர்களை பற்றியும் அதிமுகவின் கொள்கைகளைப் பற்றியும் பொது வெளியில் அவதூறாக பேசி வருவதாகவும் ,
மேலும் பேசியவர் , பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கடந்த 20 8 2023 ஆண்டு மதுரையில் நடந்த அதிமுகவின் மாநாட்டை விமர்சனம் செய்ததாகவும் தொடர்ந்து அதிமுக தலைவர்களைப் பற்றி அவதூறாக பேசி வருவதாகவும் இதனால் கட்சி தொண்டர்கள் கழக நிர்வாகிகள் என அனைவரும் கொந்தளித்துடன் காணப்படுவதாகவும்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முழுவதுமாக விலகிக் கொள்வதாக இந்த மாவட்ட செயலக கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்திருப்பது அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்த இனிப்பு கொண்டாடினார்கள்.
+ There are no comments
Add yours