அண்ணாமலை தோற்றதால் பந்தயம் கட்டிய பிரமுகர் மொட்டை !

Spread the love

கோவையில் பாஜக மாநில தலைவர் தோல்வியடைந்ததை அடுத்து, தூத்துக்குடியில் அக்கட்சியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சாலையில் நடுவே அமர்ந்து மொட்டையடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். கோவை தொகுதியில் அண்ணாமலை வெற்றி பெறுவார் என மாநிலம் முழுவதும் உள்ள பாஜகவினர் உறுதியுடன் நம்பிக் கொண்டிருந்தனர். இதனால் பிற கட்சிகளில் உள்ள தங்கள் நண்பர்களிடம் பாஜகவினர், பெட் கட்டுவது, சவால் விடுவது போன்ற பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியம் பரமன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் பாஜக நலத்திட்ட பிரிவு பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். மக்களவைத் தேர்தலை ஒட்டி அதே ஊரைச் சேர்ந்த மாற்று கட்சி நண்பர்களிடம், அண்ணாமலை கோவை தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார் என அவர் சவால் விட்டுள்ளார். அவ்வாறு அவர் வெற்றி பெறாவிட்டால் பரமன்குறிச்சி பஜார் பகுதியில் மொட்டை போட்டு ரவுண்டானாவை சுற்றி வருவேன் என அவர் சவால் விட்டிருந்தார்.

இதனிடையே மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை தோல்வி அடைந்ததை அடுத்து, ஜெய்சங்கரின் நண்பர்கள் பலரும் அவரை அழைத்து இது குறித்து கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் நேற்று பரமன்குறிச்சி பஜார் பகுதிக்கு வந்த அவர், நாவிதர் ஒருவர் மூலம் சாலையில் அமர்ந்தபடி தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டார். பின்னர் அங்கேயே தன் மீது தண்ணீரை ஊற்றிக் கொண்ட ஜெய்சங்கர், பின்னர் ரவுண்டானாவை சுற்றி வந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours