புதுச்சேரி மாநிலத்தில் இனி தமிழ்நாடு கல்வித் திட்டம் இல்லை என்று சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
முன்னதாக அந்த பாடத்திட்டத்தில் பயில விரும்பாத மாணவர்களுக்கு தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பயில ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், அமைச்சர் நமச்சிவாயம் தமிழ்நாடு கல்வி திட்டம் இனி இல்லை என்று அறிவித்துள்ளார். இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
+ There are no comments
Add yours