மதுபான கடைகளை படிப்படியாக குறைதிடுங்கள்.. அரசுக்கு நடிகர் விஷால் கோரிக்கை !

Spread the love

தமிழ்நாடு அரசு விஷச் சாரயத்தை ஒழிக்கவும், போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட செயல் திட்டம் வகுத்திட வேண்டும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக விஷால் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ‘கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் விஷச் சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும், போதை பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர் கதையாகவே உள்ளது.

சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும் இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்.” என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க தமிழ்நாடு அரசு விஷச் சாரயத்தை ஒழிக்கவும், சமீப நாட்களாக தமிழகத்தில் புழங்கும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட செயல் திட்டம் வகுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வாயிலாக தமிழக மக்களின் ஒருவனாக தமிழ்நாடு அரசிற்கு சமர்பிக்கிறேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் அருந்தி ஏழை, எளிய மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி, சேலம் ஆகிய ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ள நிலையில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours