அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 10 இடங்களில் சோதனை!

Spread the love

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில், நீதிமன்ற காவலில் புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது வரை அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இருக்கிறார் என்றே கூறலாம். இருப்பினும், செந்தில் பாலாஜி உடல்நிலை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி மீதான ஜாமீன் மனுவை யார் விசாரிக்க வேண்டும் என குழப்பம் நீடித்து வந்த நிலையில், முதன்மை மருவு நீதிமன்றமே விசாரிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது, இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் கோரப்பட்டது. அதே வேளையில் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கேட்டு அமலாக்கத்துறையும் வாதிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது பற்றிய உத்தரவு வெள்ளிக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, செந்தில் பாலாஜி கைதுக்கு பிறகு, அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. கரூர், கோவை என பல்வேறு இடங்களில் செந்தில் பாலாஜி உறவினர்கள், அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் மற்றும் சில நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியிருந்தது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொழில் முறையில் தொடர்பில் இருந்தவர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை என தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை தொடங்கியுள்ளதாகவும், சென்னையில் நுங்கப்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்டஇடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக நுங்கப்பாக்கத்தில் உள்ள செந்தில் பாலாஜி நண்பர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இன்றுடன் 3 மாதங்கள் நிறைவு பெறும் நிலையில், அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours