அதிமுக மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்(சீமான்) ஆதரவு தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறி கருணாபுரத்தில் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்ததில் 63 பேர் உயிரிழந்த தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி மரணங்கள் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் எனவும், இதற்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அதிமுக கடந்த நான்கு நாட்களாக அமளியில் ஈடுபட்டது .
இதனை தொடர்ந்து நடப்புக் கூட்டத் தொடர் முழுவதுமே அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும்,
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கோரியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டதிற்க்கு தேமுதிக தலைவர்பிரேமலதா விஜயகாந்த் நேரில் வந்து தனது ஆதரவை தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து ,அதிமுக மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours