திமுக மகளிரணி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்னை வந்தனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்னை வந்தனர். அவர்களை முதலமைச்சர் முக ஸ்டாலின்,தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மேலுக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி..
இன்று மதியம் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின்தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ கள் ,எம் பி கள்,மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில், சாதிவாரி கன்னெடுப்பு ,மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours