தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்- நாகையில் பரபரப்பு

Spread the love

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் செருதூர் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில், சந்திரன், ஆறுமுகம், மதுரைவீரன் உள்ளிட்ட 4 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கோடியக்கரை தென்கிழக்கே 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 2 படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதுடன், அவர்களைத் தாக்கியுள்ளனர்.

பின்னர், படகில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான வலைகள், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர் தாக்கி, அவர்களது உடைமைகளை கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் தொடர்வதால் மீனவர்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours