காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரித் தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விரிவான அறிக்கை தர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி ஆற்றுநீர்ப் பகிர்வு தொடர்பான பிரச்னைச்களைக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆகஸ்ட் மாதத்துக்குத் தர வேண்டிய தண்ணீர்ப் பங்கைக் கா்நாடகா வழங்க மறுத்துத் வருவதாகக் கூறி உச்சச் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கின் விசாரணை உச்சச் நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் பி.ஆர் கவாய், நரசிம்மா மற்றும் பி.கே மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.
அப்போது, தமிழகத்துக்குத் தர வேண்டிய தண்ணீரின் அளவைத் தீர்மானிப்பதற்கு, ஆகஸ்ட் 28 ஆம் தேதி கூடி முடிவெடுக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
காவிரியாற்றின் அணைகளில் நீர் இருப்பு, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு உள்ளிட்ட விவரங்களையும், காவிரி ஆணையம் வழங்கிய உத்தரவைக் கர்நாடகம் செயல்படுத்தியதா என்பதையும் செப்டம்பர் ஒன்றாம் தேதிக்குள் விளக்கமாக அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.
+ There are no comments
Add yours